கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் புகை பிடிக்க அனுமதித்த கடைகளுக்கு அபராதம்

கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் புகைப்பிடிக்க அனுமதித்த கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் நேற்று அபராதம் விதித்த னர்.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஆன்ஸ் போன்ற போதைப் பொருட்களை தமிழகத்தில் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், புகையிலைப் பொருட்கள் பள்ளிகள், கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படுகிறதா? என காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் திமிரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் தலைமையில், மேற்பார்வையாளர் பிரபு, பாண்டியன் மற்றும் ஆய்வாளர்கள் சூர்யா, மோகன் ஆகிய குழுவினர் நேற்று கலவை சாலை, ஆரணி சாலைகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

அப்போது புகை பிடிக்க அனுமதித்த கடை உரிமையாளர்களுக்கு தலா 100 வீதம் 9 கடைகளுக்கு 900 அபராதம் விதித்தனர். மேலும், கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது, புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என தகவல் பலகை வைக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.