காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்பாபு (வயது 50) வியாபாரி. இவரது மனைவி மைதிலி. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இதனால் மைதிலி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் சதீஷ் பாபு தனது மனைவி மைதிலியை சேர்ந்து வாழ வரும்படி அடிக்கடி அரப்பாக்கம் வந்து அழைத்துள்ளார். அதற்கு மைதிலி சம்மதிக்கவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி அரப்பாக்கத்திற்கு வந்து தனது மனைவியை சேர்ந்து வாழ மீண்டும் அழைத்துள்ளார். அப்போதும் மைதிலி சம்ம திக்காததால் அவர் கண் முன்னே விஷத்தை குடித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலை யில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குட் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.