ராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

A fire broke out in a closed chemical factory in Sipcot, Ranipet.ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் தொழிற்சாலையில் இருந்து புகையுடன் தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எதற்காக தீ விபத்து ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.