ராணிப்பேட்டை மாவட் டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகையை தொடர்ந்து பெற தங்களது ஆவணங்களை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
Persons with disabilities should submit documents by 15th to continue receiving monthly assistance, collector said


மனவளர்ச்சி குன்றியோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப் பட்டோர், தொழுநோயினால் பாதிக்கப்பட்டோர், 75 சதவீதத்திற்கு மேல் கடுமையாக கை, கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு, ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 2 ஆயிரம் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பயனாளிகளின் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றிருந்தால் அதற்கான நகல் ஆகிய சான்றுகளுடன் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. 

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை தொடர்ந்து பெற தங்களது ஆதார் எண், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்காதவர்களின் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, வங்கிக்கு சென்று மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கிடைக்க பெறவில்லை என்று தங்களது வங்கிக்கணக்கு புத்தகத்தில் பதிவு செய்தபின் தெரியவருமானால், உடனடியாக மேற்காணும் சான்றுகளுடன் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு இம்மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பித்து தங்களுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை பெற்று பயனடைய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.