ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரை சேர்ந்தவர் கோபால். இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதையறிந்த பிரகாஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து பிரகாஷ் ஆற்காடு தாலுகா போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.