பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(68). இப்பகுதியில் நேற்று முன் தினம் மாலை காற்றுடன் சிறிது நேரம் மழை பெய்தது. மழைவிட்டவுடன் வள்ளியம்மாள் தன்னுடைய நிலத்தை பார்வை யிட சென்றுள்ளார்.

அப்போது பம்ப்செட் அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளதை பார்க்காமல் அதை மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இந்நிலையில், பக்கத்து நிலத்தை சேர்ந்த வீரப்பன் என்பவர் நேற்று காலை அவ்வழியாக சென்றபோது, மின்கம்பி மிதித்து வள்ளியம்மாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கும், பாணாவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். 

தகவலின் பேரில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வள்ளியம்மாள் சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து. வழக்கு பதிவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.