✍ 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் பிறந்தார்.

முக்கிய தினம் :-


உலக புவி தினம்

🌍 புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.

🌍 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.பிறந்த நாள் :-


விளாதிமிர் லெனின்

👉 'லெனின்' என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ்.

👉 இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார்.

👉 1917ஆம் ஆண்டு மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

👉 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் தனது 53ம் வயதில் (1924) மறைந்தார். இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர்.மோன்டால்சினி

💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (Rita Levi Montalcini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

💉 இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

💉 நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத்தன்மை சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.

💉 இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

💉 இவருக்கு ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம், 'நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்' என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி தனது 103வது வயதில் (2012) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது.

1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார்.

1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது..

1809 – ஆத்திரிய இராணுவம் நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரஞ்சு பேரரசு இராணுவத்திடம் தோற்றது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.

1889 – நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.

1906 – 1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏதென்சு நகரில் ஆரம்பமானது.

1912 – உருசியாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

1915 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர நகரில் செருமனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.

1930 – ஐக்கிய இராச்சியம், யப்பான், அமெரிக்கா ஆகியன நீர்மூழ்கிக் கப்பல் போர்முறையின் சீர்மை குறித்தான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஜயபுர என்ற இடத்தில் தரையிறங்கினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற இட்லர் பதுங்கு அறையில் இருந்தவாறு தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, தற்கொலையே ஒரே வழியெனக் கூறினார்.

1946 – மலாயாவில் சப்பானின் ஆக்கிரமிப்பில் 5 ஆண்டுகளாக இருந்த இலங்கையரின் முதலாவது தொகுதியினர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.[1]

1948 – அரபு – இசுரேல் போர்: இசுரேலின் முக்கிய துறைமுக நகரான கைஃபா அரபுப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

1970 – முதலாவது புவி நாள் கொண்டாடப்பட்டது.

1972 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கக் குண்டுவீச்சுகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க் நகரம், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1977 – ஒளியிழை முதற்தடவையாக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

1983 – இட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற செருமனிய இதழ் அறிவித்தது. ஆனால் இக்குறிப்புகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது.

1992 – மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.

1997 – அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1997 – பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

2004 – வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் உயிரிழந்தனர்.

2005 – யப்பானியப் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி யப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கேட்டார்.

2006 – நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.

2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

2014 – காங்கோவில் கட்டாங்கா மாகாணத்தில் தொடருந்து விபத்து ஒன்றில் 60 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

2016 – புவி சூடாதலைத் தவிர்ப்பதற்கான உதவிகள் குறித்த உடன்பாடு பாரிசு நகரில் எட்டப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்


1451 – முதலாம் இசபெல்லா, எசுப்பானிய அரசி (இ. 1504)

1724 – இம்மானுவேல் காந்து, செருமானிய மெய்யியலாளர், மானிடவியலாளர் (இ. 1804)

1870 – விளாதிமிர் லெனின், உருசிய பொதுவுடமைத் தலைவர், சோவியத் ஒன்றியத்தை நிறுவியவர் (இ. 1924)

1891 – அரோல்டு ஜெப்ரீசு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1989)

1899 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1977)

1902 – அ. இராகவன், தமிழக நுண்கலை ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 1981)

1904 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)

1909 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற யூத-இத்தாலிய மருத்துவர் (இ. 2012)

1916 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் கலைஞர் (இ. 1999)

1931 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர் (இ. 1992)

1935 – பாமா ஸ்ரீநிவாசன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்

1937 – ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்

1940 – க. சட்டநாதன், ஈழத்து எழுத்தாளர்

1945 – கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநர்

1952 – சுப. வீரபாண்டியன், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தமிழறிஞர்

1952 – கம்லா பெர்சாத் பிசெசார், திரினிடாட் டொபாகோ குடியரசின் 7வது பிரதமர்

1962 – ஜெயமோகன், தமிழக எழுத்தாளர்

1971 – எரிக் மபியுஸ், அமெரிக்க நடிகர்

1982 – காகா, பிரேசில் கால்பந்து வீரர்

இன்றைய தின இறப்புகள்


296 – காயுஸ் (திருத்தந்தை)

1616 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1547)

1778 – ஜேம்சு ஆர்கிரீவ்ஸ், பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1720)

1866 – மத்வேய் கூசெவ், உருசிய வானியலாளர் (பி. 1826)

1942 – சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1883)

1989 – எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1905)

1994 – ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (பி. 1913)

2002 – எஸ். டி. சிவநாயகம், இலங்கை பத்திரிகையாளர், எழுத்தாளர்

2002 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (பி. 1949)

2004 – கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (பி. 1944)

2013 – லால்குடி ஜெயராமன், தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)

2020 – ஏ. ரகுநாதன், ஈழ-பிரான்சிய நாடகக் கலைஞர்

இன்றைய தின சிறப்பு நாள்


புவி நாள்

கண்டுபிடிப்பு நாள் (பிரேசில்)

பெரும் இன அழிப்பு நினைவு நாள் (செர்பியா)