ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிலிருந்து நேற்று மதியம் 12.46 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று சோளிங்கர் நோக்கி புறப்பட்டது. சோளிங்கர் அடுத்த பத்மாபுரம் கிராமம் அருகே 1.45 மணியளவில் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரக்கோணத்தை சேர்ந்த எபி நேசர் (50), சோளிங்கரை சேர்ந்த ருக்மணி(41), துரை (45), வசந்தா (70), வாலாஜாவை சேர்ந்த யோகலட்சுமி (19), கண்ணன் (56). ஆற்காட்டை சேர்ந்த நரேஷ் (32), ராஜகோபால் உட்பட 21 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந் தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக சோளிங்கர் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தின் மீது பஸ் மோதி 21 பயணிகள் படு காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.