கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியின் மூத்த மகன் வினோத், தி.மு.க-வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் ‘முரசொலி’யில் வெளியானது. 

‘‘ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, நான்காவது முறை சட்டமன்றத்துக்குத் தேர்வாகியிருக்கிற காந்திக்கு வினோத், சந்தோஷ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சர்வதேச தரத்திலான ‘ஜி.கே‘ பள்ளி இயக்குநர்களான இருவரும் நேரடி அரசியலில் தலைக்காட்டாமல் இருந்தனர். 

காந்தி, மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், கட்சிப் பணிகளில் அவரின் மகன்கள் தலையீடு அதிகம் இருந்தது. பல்வேறு சமயங்களில் தந்தைக்கு பதிலாக அவருடைய மகன்கள்தான் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கிவந்தனர். தந்தைக்குக் கிடைக்கிற அதே மரியாதை வரவேற்புகள் இரு மகன்களும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் நேரடி அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் காந்தியின் மூத்த மகன் வினோத்.