வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் கற்பகம் கூட்டுறவு அங்காடியின் கிளை அலுவலகம் உள்ளது. 
நேற்று முன்தினம் அந்த கிளையின் மேலாளர் மோகனவேல் (52), வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிச் சென்றார். நேற்று காலை வழக்கம்போல் அலுவலகம் கதவைத் திறந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று டிராயரில் வைத்திருந்த 54 ஆயிரத்து 690 ரூபாயை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.