250 பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சைக்கிளில் சென்று ஆய்வு

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் அம்மூர் பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், நரசிங்கபுரம், அல்லிகுளம், அம்மூர் கூட்ரோடு. லாலாப்பேட்டை கூட்ரோடு, வடக்கு புதுத்தெரு, காந்தி தெரு. அம்மூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) செ.முத்து மேற்பார்வையில் நேற்று நடந்தது.

முகாமில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து காண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மொத்தமாக 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் அம்மூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முகமது சையத் கவுஸ், அலுவலக பணியாளர்கள், அம்மூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக தடுப்பூசி முகாமை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.