ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்மழைமற்றும் ஆந்திரா கலவகுண்டா அணை திறப்பால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஏரி நிரம்பி கோடி போகிறது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையால் அங்குள்ள கலவகுண்டா அணை நிரம்பியது. தொடர்ந்து, அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் பொன்னை ஆற்றில் கலந்து வருகிறது.  தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னை அணைக்கட்டு மூலம் 2 பிரதான கால்வாய்கள் வழி யாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரிய காஞ்சிபுரம், சோளிங்கர், கொடைக்கல் உட்படபல் வேறு ஏரிகளுக்குநீர்வரத்து ஏற்பட்டு ஏரிகள் நிரம்பி வருகின்றன.


மேலும், மற்றொருபிரதான ஆற்றுக்கால்வாய் வழியாக வரும்பொன்னை ஆற்றுநீர் சென்று குமணந்தாங்கல் ஏரி நிரம்பியுள்ளது. தொடர்ந்து, அருகில் உள்ள ஏகாம்பரநல்லூர், கத்தாரிக்குப்பம், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை ஏரிகள் நிரம்பி எடப்பாளையம் அருகே ஏரி கோடி போய் கொண்டிருக்கிறது.

இந்த உபரிநீர் வானாபாடி, செட்டித்தாங்கல், மாந்தாங்கல், அம்மூர் ஏரிகளுக்கு சென்று நிரம்பிகோடி செல்கிறது. அதேபோல், அனந்தலை வழியாக செல்லும் உபரிநீரால் செங்காடு. வள்ளுவம்பாக்கம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் வேகமான நிரம்பி வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.