வேலுார் மாவட்டம் ஒடுகத்துார் அருகே பின்னத்துரை தானப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (60). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (47). இவர்களது மகன் பூவிழிராஜா, மகள் பிரியங்கா (26). பிஇ., படித் துவிட்டு வீட்டில் இருந்த இவருக்கு உடல் நிலை பாதித்தது.

இதனால் விரக்தியில் இருந்த அவர் கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மகள் இறந்த துக்கம் குடும்பத்தினரை வாட்டியது. நேற்று முன்தினம் இரவு துரைராஜ், சரஸ்வதி, பூவிழிராஜா ஆகியோர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது என முடிவு செய்தனர்.

அதற்கு முன்னதாக, 'எங்கள் தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை. எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. இது, நாங்கள் சுயநினைவுடன் எடுத்த முடிவுதான். யார் மீதும் சந்தேகம்பட வேண்டாம். சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' என்றுகடிதம் எழுதி கையெழுத்து போட்டு வீட்டில் வைத்துவிட்டனர்.

பின்னர் மூவரும் வீட்டில் இருந்த எலி மருத்தை எடுத்து பிஸ்கட்டில் கலந்து சாப்பிட்டுள்ளனர். இதில் மயங்கி விழுந்த சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.