ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மாதம் 29ம் தேதி பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 நடைபெற உள்ளது. 
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

75வது சுதந்திர தின விழா முன்னிட்டு மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 நிகழ்ச்சி நடத்தி அனைத்து பொது மக்களும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 இம்மாதம் 29ம் தேதி காலை 8 மணியளவில் இந்த ஓட்டம் நடைபெறும். 
இந்திய மக்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் தினசரி 30 நிமிடங்கள் உடல்நலம் மேம்பட நேரம் ஒதுக்க வேண்டும். என்கிற நோக்கத்தில் இந்த ஓட்டம் நடத்தப்பட உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரோட்டரிகிளப், மத்திய அரசின் நேருயுவகேந்திரா ஆகியவை இணைந்து இந்த ஓட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 75 வரையிலான எண்ணிக் கையில் இளைஞர்கள் விளையாட்டு சீருடைகள் அணிந்து பங்கேற்கின்றனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நகரப்பகுதி, எஸ்பி அலுவலகம் வரை 2 கி.மீ தூரம் சுற்றி வந்து நிறைவு ஓட்டம் நிறைவு பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.