மத்திய அரசின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையுடன் இணைந்து தமிழக அரசு முதியோர் உதவி எண்ணை (14567) செயல்படுத்துகிறது.
இந்த ஹெல்ப் லைன் அறிமுக கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தி பேசிய கலெக்டர், "முதியோர் ஹெல்ப்லைன் மூலம் வழங்கப்படும் சேவைகள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள், வலிநிவாரண மையங்கள் குறித்து முதியோர்களுக்கு தேவைப்படும் தகவல்கள், அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்டவழி காட்டுதல்கள், பராமரிப்பு சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், மனநல ஆலோசனைக்கான வழிகாட்டு தகவல்கள், ஆதரவற்ற இடத தில் இருந்து முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்னைகளை தீர்க்க போன்ற வழிகாட்டுதல் சேவைகள் ஹெல்ப் லைன் 14567 மூலம் வழங்கப்படும்.

மேலும் பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு, பராமரிப்பும் இல்லாத முதியோர்களுக்கான உதவிகளுக்கும், மருத்துவ, மனநல, சட்ட ஆலோசனைகள் வழிகாட்டுதலுக்கும் கட்டணமில்லா இந்த தொலைபேசி அனைத்து நாட்களிலும் காலை எண் 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்". என்றார்

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, சப்கலெக்டர்கள் தாரகேஸ்வரி, இளவரசி, மணிமேகலை, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஷ்வரி, மாநில களப்பொறுப்பு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.