கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் வசதிகள் தமிழக அரசின் சார்பில் சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் கட்டப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் தங்கும் விடுதியை தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் மதி வேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்ய காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.

Vedio Link : Click Hereபயணியர் விடுதியை ஆய்வு செய்ய வந்த அமைச்சருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் அரசு அதிகாரிகளும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் வந்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ஆய்வு செய்ய வந்த பயணியர் தங்கும் விடுதி அருகே தனியாருக்கு சொந்தமான ஏராளமான சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலத்தில் லாரிகளை நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை தடுக்காத அறநிலையத் துறை ஊழியர்களை அமைச்சர் மற்றும் ஆட்சியர் முன்னிலையிலேயே கடும் வார்த்தைகளால் கண்டித்தார். ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே அதிகாரிகளை செருப்பு பிய்ந்து விடும் என கடும் சொற்களால் அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் மிரட்டினார்.
பத்திரிக்கையாளர் சிலர் வீடியோ எடுப்பதை பார்த்து, பின்னர் சுதாரித்த சட்டமன்ற உறுப்பினர், சுற்றி பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதால் இதற்கு மேல் பேசவில்லை எனவும் தன்னுடைய மிரட்டலை நிறுத்தினார். இதனைக்கண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் சட்டமன்ற உறுப்பினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
இதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனம் நிறுத்தும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு சென்றார். தற்பொழுது ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இவ்வாறு அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியது, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்