வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி, கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. இந்த ஏரி கடந்த 1961ம் ஆண்டு நிரம்பி கோடி போனது. இதையடுத்து, 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி கோடி போகிறது. 185 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நிரம்பியதையெடுத்து 100க்கும் மேற்பட்டோர் நேற்று கிடாவெட்டி மேளா தாளங்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த ஏரிநீரால் கீழ்.ஆலத்தூர், கே.ஏ.மோட்டுர், சேத்து வண்டை, சென்றாம்பள்ளி, பசுமாத் தூர், கொசவன்புதூர், நத்தமேடு,அர்ஜினாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறுகின்றனர்.

இந்நிகழ்விற்கு ஆயக்கட்டு சங்கதலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் பாரதி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சீதாராமன், ரவி, ஊராட்சிமன்ற தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்தி ரன் பங்கேற்றார்.