கொரோனா கட்டுப்பாடு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு மதிய வேளையில் வழங்கப்படும் சத்துணவு நிறுத்தப்பட்டு, மாதந்தோறும் உலர் உணவு பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காட்டுப்பாக்கம் தொடக்கப் பள்ளியில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில், நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ், மாணவர்களுக்கு அரிசி, பருப்பு. முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.
அப்போது. தலைமையாசிரியர் புவியரசு, ஆசிரியர்கள் தாமோதரன், வித்யா, சத்துணவு அமைப்பாளர் ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.