ராணிப்பேட்டை முத்துக்கடை காந்திசிலை அருகே ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை துப்புரவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் டி.வெங்கடேசன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் எம் குப்பன் முன்னிலை வகித்தார் வாசுதேவன் முருகன் ஆகியோர் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் தா. வெங்கடேசன் கலந்துகொண்டு நகராட்சி நிர்வாக இயக்குனரின் 2 -10 -21 அன்று உத்தரவை திரும்பப் பெறு. தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிடு , கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களை அனைவரையும் பணி நிறுத்தம் செய் , அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வாறு தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்து , போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர் , மேலும் இதில் நெடுஞ்செழியன் மனோகரன் விஜயன் குப்பன் சுசீலா தேவகி உள்ளிட்டோர் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.