ராணிப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீஸ் முகாமில் தீபாவளி பட்டாசு விற்பனையை எஸ்பி தீபாசத்யன் தொடங்கி வைத்தார்.



ராணிப்பேட்டை மாவட்டம் ஆயுதப்படை போலீஸ் முகாம் ராணிப்பேட்டை எம்.பி.டி. சாலை, ஐ.வி.பி.எம். எதிரில் உள்ள அரசு இளைஞர் இல்ல வளாகத்தில் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் தீபாவளிபட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
விற்பனையை எஸ்பி தீபாசத்யன் தொடங்கிதொடங்கி வைத்தார். இதுகுறித்து போலீஸ் உயர் அலுவலர் கூறுகையில், "சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக மொத்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இங்கு விற்கப்படுகிறது. 

மாவட்டத்தில் உள்ள போலீசாரும், பொதுமக்களும் இங்கு குறைந்த விலையில் பட்டாசு வாங்கி தீபாவளி கொண்டாட வேண்டும் என்றார்.