வாலாஜா அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன் தினம் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது பள்ளிக்கு மாணவி வராதது தெரிந்தது. இதையடுத்து, பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் வாலாஜா போலிசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.