👉 1920ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சூறாவளி காற்றின் வலிமையை அளவிடும் (ஃபுஜிதா அளவீடு) நுட்பத்தைக் கண்டறிந்த ஃபுஜிதா டெட்சுயா (Fujita Tetsuya) ஜப்பானில் பிறந்தார்.

👉 1911ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல்முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது.


பிறந்த நாள் :-


கிட்டூர் ராணி சென்னம்மா 

🏁 இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா 1778ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் பிறந்தார்.

🏁 இவர் சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்றும் பெயர் பெற்றுள்ளார். மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தை கைப்பற்ற ஆங்கில அரசு முடிவு செய்தது.

🏁 நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து போராடிய ராணியின் வீரர்களால் ஆங்கிலேய வீரர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார்.

🏁 புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் சென்னம்மா தனது சிறை வாழ்வை கழித்தார். இவர் தன்னுடைய 50வது வயதில் சிறையிலேயே (1829) மறைந்தார்.

🏁 விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.


அரவிந்த் அடிகா 

✍ சிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா 1974ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

✍ இவர் 1990-ல் நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

✍ இவரது முதல் புதினம் தி ஒயிட் டைகர் (The White Tiger) 2008-ல் மேன் புக்கர் பரிசு பெற்றது. இவர் நாவல்கள் மட்டும் இல்லாமல் சிறுகதைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்.