🌸 2001ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.


நினைவு நாள் :-


சடாகோ சசாகி 

🌟 ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

🌟 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.

🌟 சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.

🌟 அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

🌟 ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி மறைந்தாள்.


பிறந்த நாள் :-


பிக்காசோ

 
🌻 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.

🌻 ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

🌻 தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.

🌻 தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.

🌻 அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கென்று நீங்காத தனி இடத்தைப் பிடித்த பிக்காசோ தனது 91வது வயதில் (1973) மறைந்தார்.


எவரிஸ்ட் கலோயிஸ் 

🌹 தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் 1811ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

🌹 பல்லுறுப்பு சமன்பாடு சம்பந்தமான துல்லியமான இயற்கணித நிபந்தனைகளை 19வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே கண்டுபிடித்தார்.

🌹 அக்காலத்து கணிதக் கண்டுபிடிப்புகளின் முதல்வனாக திகழும் எவரிஸ்ட் கலோயிஸ் தனது 20வது வயதில் (1832) மறைந்தார்.