ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் நேற்று (24ம் தேதி) காலை 6 மணியளவில் ஆற்காடு - கண்ணமங்கலம் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.

அப்போது ஒரு டூவீலரில் வேகமாக வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், அவர்கள் வேலுார் மக்கான் பகுதியை சேர்ந்த தசரதன் மகன் சிவசக்தி (26), சத்துவாச்சாரி இந்திரா நகரை சேர்ந்த சின்னதுரை மகன் பாபு (32) என்றும், இவர்கள் 2019 ம் ஆண்டு முதல் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அத்துடன், கடந்த மே மாதம் பானாவரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜயன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஆற்காடு அடுத்த ராமாபுரம் பகுதியில் மறைத்து வைத்திருந்த 10 டூவீலர்களையும், விஜயனிடமிருந்து திருடிய செல்போனையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.