சோளிங்கரை சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி மகாலட்சுமி(38). இவர் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த நபர்கள் திடீரென மகாலட்சுமி கழுத்தில் அனிந்திருந்த 5 பவுன்தாலி செயினை பறித்தனர்.

அப்போது அவர் செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த 2 நபர்களும் அங்கிருந்து பைக்கில் எஸ்கேப் ஆகினர். 

இது குறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் வாலிபர்களை தேடி வருகின்றனர்.