பொன்னை,
வள்ளிமலை முருகன் கோயிலில் நேற்று ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு மலையடிவாரத்தில் அமைந்துள்ள மூலவர் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு தங்க கலசத்துடன் கூடிய விபூதி காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரி சையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மாடவீதியில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.