நெமிலி அருகே குடிப்பதற்காக மின்ஒயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெமிலி அடுத்த உளிய நல்லூர் பகுதிக்குட்பட்ட விஜயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார்.

அப்போது அவ்வழி யாக சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் மின் ஒயர் கையில் எடுத்துக்கொண்டு சென்றனர். உடனே 2 பேரையும் பிடித்து முருகேசன் பிடித்து விசாரணை செய்தார். அதில் முருகேசன் நிலத்தில் இருந்து மின் ஒயர்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனே 2 பேரையும் பிடித்து நெமிலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் நெமிலி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் விசாரணையில் நெமிலி அடுத்த மேல் களத்தூர் பகுதியை சேர்ந்த சின்னராஜ் (30) என்பதும். சதீஷ் குமார் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் குடிப்பதற்கு பணம் இல்லாததால் மின் வயரை திருடிச்சென்றது தெரியவந்தது.

இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.