நெமிலியை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் கீழ்வீதியில் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைச்செடிகள் மழைநீரில் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து நெமிலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், முன்னாள் பஞ்.தலைவருமான சிவகாமி நாதனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். தொடர்ந்து அவர் தோட்டக்கலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்து மழையால் எத்தனை ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று புள்ளி விவரம் கணக்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசிடம் இருந்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் விவசாயிகளிடம் கூறினார்.