₹ 8 lakh scholarship for 50 students who lost their parents to Corona
![]() |
சோளிங்கர் அருகே நடந்த நிகழ்ச்சியில், கொரோ னாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, தாசில்தார் வெற்றிக்குமார் ஆகியோர் கல்வி உதவித்தொகைக் கான காசோலை வழங்கினர். |
கொரோனாவால் பெற்றோரை இழந்த 50 மாணவர்களுக்கு ₹8 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சோளிங்கர் அடுத்த பாண்டிய நெல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று, கொரோனாவால் பெற்றோரை இழந்த 6 மாவட்டங்களை சேர்ந்த 50 மாணவி, மாணவிகளுக்கு, இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் தலைமை தாங்கினார். மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, பள்ளி தலைவர்கள் ராஜேஸ்வரி, சேகர் முன்னிலை வகித்தனர். முதல்வர் தாமோதரன் வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, தாசில்தார் வெற்றிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 மாணவ, மாணவிகளுக்கு ₹8 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.
இதில், கல்வி ஆய்வாளர் முருகன், வட்டார கல்வி அலுவலர் சுமதி, இந்திய வளர்ச்சி இயக்க திட்ட மேலாளர்கள், கருத்தாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.