Ranipettai: Assistance to irular families affected by continuous rains
கலவை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அரிசி, உணவு, துணி ஆகியவற்றை அமைச்சர் காந்தி வழங்கினார். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றிய சேர்மன் அசோக்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியது. இதையடுத்து அப்பகுதிகளை ஆய்வு செய்த கோட்டாட்சி தலைவர் பூங்கொடி கலவை தாசில்தார் ஷாமிம் ஆகியோர், இருளர் குடும் பங்களை மாந்தாங்கலில் உள்ள கிராம சேவை மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.
அமைச்சர் காந்தி வழங்கினார்
இதுகுறித்து தகவல்றிந்த அமைச்சர் காந்தி அங்கு தங்கியிருந்த இருளர் இன மக்களின் நிலையை நேரில் சந்தித்து பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு தேவையான அரிசி, உணவு, துணி ஆகிய பொருட்களை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரப்படும் என்றார். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்பி தீபா சத்யன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் மாவட்ட திமுக துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, திமிரி சேர்மன் அசோக், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் பழங்குடியினர் அதிகாரி இளவரசி, திமிரி ஊரக வளர்ச்சி அலுவலர் வெங்கடாஜலம், திமிரி ஒன்றிய துணை சேர்மன் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் தன்ராஜ், சிவகுமார் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேம்பி, கலைமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.