மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததுபோல் மாநில திமுக அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி குடும்ப தலைவிகளுகளுக்கு மாதம் தோறும் 1000 கொடுக்கக் கோரி ராணிப்பேட்டை மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு சார்பில் நேற்று மாலை ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முருகன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சிவமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தன். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் மாவட்ட பொது செயலாளரும் கட்சி வெளி விவகார பொறுப்பாளருமான ஆனந்தன் முன்னிலை வகித்தார். வர்த்தகபிரிவு பட்டியல் அணி மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து காண்டனர். பின்னர், இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.