கலவை தாலுகாவில் மழை பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து செல்கிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் கலவை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிர விலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நள்ளிரவு 12.30 மணியளவில் கலவை தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த தாசில்தார் ஷமீம் மற்றும் வருவாய்த்துறையின்ரிடம் விவரங்களை கேட்டறிந்த அவர், 'மாவட்டத்தில் அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும். ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் செல்லாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ஆர் டிஓ பூங்கொடி, கலவை தாசில்தார் ஷமீம், விஏஓ சுகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள் இருந்தனர்.