Demonstration in Arakkonam demanding railway to fill vacancies
ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், சமையல் காஸ், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அரக்கோணம் ரயில்வே மருத்துவமனை அவலங்களை கண்டித்தும் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் டிஆர்இயு மற்றும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

நிர்வாகி இளங்கோவன் தலைமை வகித்தார். டைபி மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் அபிமன்யு, ஹரிலால், பாபு முன்னிலை வகித்தனர் அருண்குமார்செழியன் வரவேற்றார். நிர்வாகிகள் பாபு, சிவகுமார், புகழும்பொன்னையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.