ராணிப்பேட்டை நகர மக்களுக்கு தினமும் 46 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் 13 லட்சம் லிட்டர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் ஒன்று பூட்டு தாக்கு பாலாற்றில் பழு தடைந்துவிட்டது. தற்போது ஆற்றில் வெள்ளம் அதிகம் இருப்பதால் பழுதை சீர் செய்ய முடிய வில்லை என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கைவிரித்துவிட்டது. இதனால் ராணிப்பேட்டை நகரத்தில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீரை காய்ச்சி குடிங்க

இந்நிலையில் ஒகேனக் கல் கூட்டு குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள குறை பாட்டை போக்க தினமும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய முடிவெடுத்து நகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் டேங்கர் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் ஜெய ராமராஜா தெரிவித்தார்.

மேலும் காய்ச்சல், வயிற்று போக்கு நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள அனைவரும் குடி நீரை காய்ச்சிய பிறகு குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.