தொடர்மழையால் வாலாஜா அடுத்த அனந்தலை பெரிய ஏரி நிரம்பி கோடி போனது. அங்கு பொதுமக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பாலாறு மற்றும் நீர்நிலைகள். உள்ளிட்டவைகள் நிரம்பி வழிந்துள்ளது. அதன் படி வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பொன்னை யாற்று உபரிநீர் தொடந்து வெளியேற்றப்படுகிறது.
அது கால்வாய் வழியாக பல்வேறு ஏரிகளுக்கு நீர் செல்கிறது. அதன்படி பொன்னையாற்றின் உபரிநீர் அனந்தலை ஏரிக்கு அதிகளவில் வந்தது. நேற்று இந்த ஏரி நிரம்பி வழிந்தது. அதனால் மதகுகள் வழியாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் பல்வேறு கால்வாய் வழியாக குளம், விவசாய கிணறு, மற்றும் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்கிறது.
இதற்கிடையே நீர் நிலைகளில் அதிகளவில் மீன்கள் வருவதால் மக்கள் அதை பிடிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். மேலும் சிறுவர்கள் அனந்தலை ஏரியின் கால்வாயில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.