Due to the lack of access to the cemetery near Walaja, the public went through the field after the road blockade

பாணாவரம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் வயலில் சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே இடையன்தாங்கள் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் யாராவது இறந்து விட்டால், சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் முனியம்மாள் (75) என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார் சடலத்தை எடுத்து செல்ல வழி இல்லாமல், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தவித் தனர்.

இந்நிலையில், ஆத் திரமடைந்த அவர்கள் வாலாஜா-பனப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவல் றிந்த ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் விஏஓ உள்ளிட்ட அதிகாரரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனையேற்று அவர்கள் மறியலை கைவிட்டு மூதாட்டியின் சடலத்தை இடுப்பளவு ஓடை தண்ணீரிலும், நெல் விளைவிக்கப்பட்ட விவசாய நிலத்திலும் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். 

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.