Farmer cow killed by electric shock near Arcot

ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். பசு மாடும் இறந்தது.

ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள நம்பரை பிராமணர் தெருவை சேர்ந்தவர் சங்கர்(40), விவசாயி இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர் சங்கர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 4 மாடுகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாடுகளை வேறு இடத்தில் மாற்றி கட்டிவிட்டு வருவதாக. வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை.

இதனால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, சங்கரும், பசுமாட்டின் கன்றும் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி பாதுமக்கள் விஏஓ ஞானவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திமிரி போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.