Farmers' grievance meeting on 30th at Ranipettai Collector's office


ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இம்மாதம் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி துறை, மீன் வளத்துறை. கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு. வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை, பால்வளத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் களப்பிரச்னைகளை களைத்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை, கோரிக்கை வாயிலாகவும். தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.