புதேரி ஏரி நிரம்பி கீழ்களத்தூர் சிறுணமல்லி மெயின் ரோட்டில் வெள்ளம் செல்வதால் ரோடு அரிப்பு ஏற்பட்டு 10 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெமிலி யூனியன் சேர்மன் வடிவேலு ரோட்டை சீர்செய்வதற்கான நடவடிக்கையில் எடுத்தார்.


புதேரி ஏரி நிரம்பியது

கீழ்களத்துார் சிறுண மல்லி செல்லும் ரோடு மழைநீரால் துண்டிக்கப்பட்டதால் 10 கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெமிலி பஞ். யூனியனுக்கு உட்பட்ட புதேரி ஏரி நிரம்பி வழிகிறது.

இந்த உபரிநீர் செல்வதற்கு கடைவாசல் இல்லாத தால் கீழ்களத்துார் சிறுண மல்லி மெயின் ரோடு வழியாகவே இந்த வெள்ள 'நீர் சில நாட்களாக சென்று வந்த நிலையில் நேற்று திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று திடீரென ரோடு  போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.

ரோடு அரிப்பு போக்குவரத்து பாதிப்பு

இதனால் மானாமதுரை, கீழ்களத்துார், எலத்துார், மேல்களத்துார், அரசங்குப்பம், வெளிதாங்கிபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நெமிலி பஞ். யூனியன் சேர்மன் வடிவேலுவுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சேர்மன் வடிவேலு, பஞ். தலைவர் குமார், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அப்துல்ரகுமான், பஞ். செயலாளர் பெருமாள் மற்றும் பலர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட ரோட்டை பார்வையிட்டனர்.

தற்காலிக ரோடு

பின்னர் நெமிலி பிடிஓவுக்கு பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்து தற்காலிகமாக ரோடு அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிந்ததும் அங்கு சிறுபாலம் அல்லது புதேரி ஏரி நிரம்பி வழியும் தண்ணீர் வழிந்தோடுவதற்கு கால்வாய் அமைத்து சிறுணமல்லி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேர்மன் வடி வேலு கிராம மக்களிடம் உறுதியளித்தார்.