ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தம் செய்யவும், சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும் சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், நகராட்சி, பேரூர் அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகள் உட்பட 619 மையங்களில் கடந்த 1ம் தேதி தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

இந்த சிறப்பு முகாம்களில் சனி, ஞாயிறு ஆசிய விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.