ராணிப்பேட்டை கலெக் டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மாணவ, மாணவியருக்கான 13 பள்ளி விடுதிகள். 3 கல்லூரி விடுதிகள் இயங்கி வருகின்றன. பள்ளி விடுதிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 

விடுதிகளில் 85 சதவீ தம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 10 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் 5 சதவீதம் இதர வகுப்பினர் என்ற விகிதாச்சார அடிப்படையிலும், ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஏற்படுத்தப்படும். தேர்வு குழு மூலம் புதிய மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்யப்படும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 5 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்கு பொருந்தாது. 

தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி விடுதிகாப்பாளர், காப்பாளினியிடமிருந்து இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் வருகிற 7ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாணவர்களின் சாதிச்சான்று, ஆதார் அடையாள அட்டை வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்களை இணைக்க வேண்டும். பெற்றோர். பாதுகாவலர் ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பத்தில் முழுமையாக பூர்த்தி செய்த, உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும். அதில், கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.