ராணிப்பேட்டையில் உள்ளாட்சி தேர்தலின் போது பெண் ஒருவர் தான் அளித்த வாக்குறுதியை ஊராட்சி மன்ற தலைவரான பிறகு நிறைவேற்றுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி பெண் ஊராட்சி மன்றத் தலைவர்

ஈராளச்சேரி பஞ்சாயத்து தலைவருக்கு குவியும் வாழ்த்துஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் ஈராளச்சேரி. இந்த ஊராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யபாரதி தினேஷ் காந்தி என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது, தான் வெற்றி வெற்றால் ஈராளச்சேரி பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இலவச வேன் வசதி செய்து கொடுப்பதாக அறிவித்திருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஈராளச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக திவ்யபாரதி தினேஷ் காந்தி பதவியேற்றார். இதனையடுத்து, ஈராளச்சேரி உட்பட அதன் சுற்றுவட்டார நான்கு கிராமங்களிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் வசதிக்காக காலை, மாலை இருவேளையும் தனது சொந்த செலவில் வேன் வசதியை ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர் மழை;உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது! இதனால், ஈராளச்சேரி மக்களின் நன்மதிப்பை பெற்ற திவ்யபாரதி SuperWomen என்று அன்போது அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திவ்யபாரதி தினேஷ் காந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


The female panchayat president has provided van facilities for government school students in ranipet district


Such a panchayat leader! Girl soaking in the shower of praise! Panchayat leader who fulfilled the promise