குறள் : 562
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
மு.வ உரை :
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.
கலைஞர் உரை :
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
சாலமன் பாப்பையா உரை :
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.
Kural 562
Katidhochchi Mella Erika Netidhaakkam
Neengaamai Ventu Pavar
Explanation :
Let the king who desires that his prosperity may long remain to commence his preliminary enquires with strictness and then punish with mildness.
இன்றைய பஞ்சாங்கம்
06-11-2021, ஐப்பசி 20, சனிக்கிழமை, துதியை திதி இரவு 07.44 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.38 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சந்திர தரிசனம். கரிநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 06.11.2021
மேஷம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்மந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பழைய கடன்கள் குறையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒரு சிலருக்கு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
தனுசு
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதி நிலவும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்
இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்பிடம் ஒற்றுமை குறையும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,