குறள் : 566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
மு.வ உரை :
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
கலைஞர் உரை :
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை :
சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.
Kural 566
Katunjollan Kannilan Aayin Netunjelvam
Neetindri Aange Ketum
Explanation :
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness will instantly perish instead of abiding long with him.
இன்றைய பஞ்சாங்கம்
10-11-2021, ஐப்பசி 24, புதன்கிழமை, சஷ்டி திதி காலை 08.25 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.41 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் பகல் 03.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 10.11.2021
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது.
கடகம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழி உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.
மகரம்
இன்று சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் கவனமாக செயல்படுவது உத்தமம்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001