குறள் : 583

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்த தில்.


மு.வ உரை :

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.


கலைஞர் உரை :

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.


சாலமன் பாப்பையா உரை :

எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.


Kural 583

Otrinaan Otrip Poruldheriyaa Mannavan

Kotrang Kolakkitandhadhu Il


Explanation :

There is no way for a king to obtain conquests who knows not the advantage of discoveries made by a spy.




இன்றைய பஞ்சாங்கம்

27-11-2021, கார்த்திகை 11, சனிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 06.00 வரை பின்பு தேய்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 09.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் 

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. 

இன்றைய ராசிப்பலன் - 27.11.2021

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.

மிதுனம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் பெருமைபடும் படி நடந்து கொள்வார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவீர்கள்.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

துலாம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று இல்லம் தேடி மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,