THIMIRI: Painter burns to death in fire
திமிரி அடுத்த புங்கனூர் பழைய தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் குலோத்துங்கன் (33), பெயின்டர். இவரது மனைவி பிரீத்தா (30), குலோத்துங்கனுக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குலோத்துங்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் மற்றும் புகை வந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் குலோத்துங்கன் வீட்டிற்குள் சென்று பார்த்தபொழுது குலோத்துங்கன் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.