🌷 1936ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது.

🌷 1950ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர், ஜார்ஜ் பெர்னாட் ஷா மறைந்தார்.


நினைவு நாள் :-


பரிதிமாற் கலைஞர்

✍ தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரையில் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி.

✍ இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம் வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 

✍ தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவர்தான்.

✍ இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 

✍ திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் தனது 33வது 1903ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வயதில் மறைந்தார்.


பிறந்த நாள் :-


மகேந்திரலால் சர்க்கார்

🌟 சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் 1833ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார்.

🌟 ஹோமியோபதி மருத்துவம் பற்றி வில்லியம் மார்கன் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஹோமியோபதிக்கு எதிராக தன் கருத்துகளை பதிவு செய்வதற்காகத்தான் முதலில் அந்த நூலைப் படித்தார். ஆனால், படித்து முடித்த பிறகு ஹோமியோபதியின் சிறப்பை உணர்ந்து உரிய பயிற்சி பெற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.

🌟 1876ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக 'இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்' என்ற அறிவியல் அமைப்பு இவரால் தொடங்கப்பட்டது. சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் முக்கிய ஆராய்ச்சிகள் நடத்தி பல அறிவியல் சாதனைகளை நிகழ்த்துவதற்கு இந்த அமைப்பு ஒரு களமாகவும் அமைந்தது.

🌟 சிறந்த சமூக ஆர்வலரான மகேந்திரலால் சர்க்கார் தனது 70-வது வயதில் (1904) மறைந்தார்.