Two arrested for stealing 144 two-wheelers in Ranipet

ராணிப்பேட்டையில் 144 டூவீலர்கள் திருடிய 2 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டூவீலர் திருட்டுக்கள் அதிகரித்து வந்தது. எஸ்.பி., தீபா சத்யன் உத்தரவுபடி மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை 2:00 மணிக்கு ஆற்காடு - கண்ணமங்கலம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், ஆற்காட்டை சேர்ந்த பாலாஜி, 20, ஆகாஷ், 21, என்பதும், டூவீலர் திருடர்களான இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் 144 டூவீலர்களை திருடி அவற்றை உதிரி பாகங்களாக பிரித்து, ஆந்திரா மாநிலம், சித்துாரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

ஆற்காடு போலீசார் அவர்களை கைது செய்து, நான்கு டூவீலர், ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.