ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 125 வாகனங்கள் உரிமை கோரப்படாத நிலையில் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில், 124 வாகனங்கள் இதுவரை யாரும் உரிமை கோராத நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்களுக்கான பொது ஏலம் இன்று நடை பெற இருந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தேதி மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை(3ம் தேதி) ராணிப்பேட்டை ஆயு தப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

25 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் தவறாமல் ஏலத்தில் கலந்துகொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.