ராணிப்பேட்டை மாவட்டம் தாலுகா கோவிந்தசேரி சோளிங்கர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் இவரது மனைவி காமாட்சி (48). தன்னுடைய மகன் திருமலை(28), உடன் ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி காளி கோயிலுக்கு நேற்று பிற்பகல் சென்றுள்ளனர். 

சாமி தரிசனம் செய்து விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி வரும் போது காவேரிப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கியுள்ளார். 

அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.